Site news

பரீட்சைகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது ( முடிவுத்திகதி 15.03.2017)

பரீட்சைகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது ( முடிவுத்திகதி 15.03.2017)

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

இணையவழி மூலமான வியாபார முகாமைத்துவமாணிப் பட்டப்படிப்பு அனைத்து வருடங்களுக்கான 2ம் அரையாண்டுப் பரீட்சைகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது 

மேற்படி பரீட்சையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் ஏப்ரல்  8, 9 ,10, 22,23  மற்றும் மே 6,7 திகதிகளில்  இல் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் பரீட்சார்த்திகள் பரீட்சைக்கான விண்ணப்படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களில் உள்ள செயலியில் Add Entry இனை கிளிக் செய்வதன்மூலம் அடைந்து பூர்த்தி செய்தபின் Save and View என்பதனை கிளிக்செய்வதன் மூலம் இணையத்தின் ஊடாகவே சமர்ப்பிக்கலாம்.

சகலபாடங்களுக்கும் ஒரேவிண்ணப்பத்திலேயே விண்ணப்பிக்கவும். மாணவர் அடையாள அட்டையில் உள்ளவாறு பதிவிலக்கம் வழங்கப்படவேண்டும்.  பிழையாக வழங்கப்படின் நிராகரிக்கப்படும். பூரணப்படுத்தப்படாதவிண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்  விண்ணப்பம் இணையவழி ஏற்கப்படுவதால்  Single View அச்சுப்பிரதியில் கையொப்பம் இட்டு அனுமதி அட்டை பெறும்போது சமர்ப்பிக்கவும்.முடிவுத்திகதியின் பின்னர் மாற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அதற்கு முன்பாக மாற்றம் செயவதாயின்  Single View  அடிப்பகுதி வலப்புற மூலையில் உள்ள நட்சத்திர குறியீட்டினை அழுத்துவதன் ஊடாக மேற்கொள்ளலாம்

இணையவழி விண்ணப்பத்தில் மாற்றம் செய்வதற்காக இலகுவான  சிறப்பு ஏற்பாடு ஒன்றுசெய்யப்பட்டுள்ளது அதன்படி யாரால் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது என்ற விபரம் தானாகவே தெரியுமாறு செய்யப்பட்டுள்ளது. அதில் உங்கள் விண்ணப்பத்தின் வலதுபக்க மூலையில் Edit என்றுள்ள பகுதியில் உள்ள நட்சத்திரக்குறியீட்டினை அழுத்தி உங்கள் விண்ணப்பத்தினை திருத்தவும். ஒருசிலர் ஒருதகவலும் வழங்காமல் சமர்ப்பித்துள்னர் உடனடியாக மாற்றவும்

பரீட்சைக்கு விண்ணப்பிக்காத எந்தவொருமாணவரும் பரீட்சைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். முன்னைய அணிகளில் இருந்து மீள் பரீட்சைக்கு தோற்றுபவர்களும் விண்ணப்பிக்கலாம்.அவர்கள் பரீட்சைக்கட்டணம் (ஒரு பாடத்திற்கு 1500 ரூபா )செலுத்தவேண்டும். இதற்காக வழமையான பணம் கட்டும் படிவங்களை பயன்படுத்தலாம்

உள்நுழைவு இல்லாத பழைய அணிகளில் உள்ள மீள்பரீட்சார்த்திகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களில் உள்ள உரிய விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்து உரிய பரீட்சைக்கட்டணங்களை செலுத்தி விண்ணப்பங்களை "   பதிவாளர் , திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம் , யாழ் பல்கலைக்கழகம் ” என்ற முகவரிக்கு பதிவுத்தபாலிலோ நேரிலோ முடிவுத்திகதிக்கு முன்பாக அனுப்பி வைக்கவும் 

விண்ணப்பம் தொடர்பில்ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கு moodleadmin@jfn.ac.lk என்ற மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ளவும். 15.03.2017 ம் திகதிக்கு பின்னர் விண்ணப்பிக்க முடியாது.

அவசர உதவிகளுக்கு 0777563213 அல்லது 021 222 1106 , 021 222 3612  உடன் தொடர்பு கொள்ளவும்

இணையவழி விண்ணப்பங்கள்
(உரிய ஆண்டுக்குரியதை பயன்படுத்தவும்)

  1. 1st Year 2nd Semister Exam Application [April 2017]

  2. 2nd Year 2nd Semister Exam Application [April 2017]

  3. 3rd Year 2nd Semister Exam Application [April -May 2017]


உள்நுழைவில்லாத மீள்பரீட்சார்த்திகளுக்கான விணப்பப்படிவங்கள்

  1. 1st Year 2nd Semister Exam Application [April 2017]

  2. 2nd Year 2nd Semister Exam Application [April 2017]

  3. 3rd Year 2nd Semister Exam Application [April -May 2017]


மீள்பரீட்சார்திகளுக்கான கட்டணப்படிவம்

   பரீட்சை நேர அட்டவணை 

குறிப்பு - வவுனியா வளகத்தில் பரீட்சை நிலையம் அமையாது.

-இணைப்பாளர், BBM Online -