வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறி (வெளிவாரி) இரண்டாம் வருட 1 ம் அரையாண்டு, மூன்றாம் வருட 1ம் அரையாண்டுக்கான பரீட்சைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பெப்ரவரி மாத நடுப்பகுதியிலிருந்து நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பரீட்சைக்கு தோற்றத் தகுதியான பரீட்சார்த்திகள் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்திலோ அல்லது www.codl.jfn.ac.lk எனும் இணையத்தள முகவரியிலோ விண்ணப்பப்படிவத்தினைப் பெற்றுக்கொள்ளலாம்.வேறு அணிகளில் இருந்தான மீள்பரீட்சார்த்திகள் அதற்குரிய கட்டணங்களையும் செலுத்தவேண்டும்.
மேற்படி பரீட்சைகளுக்கான பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி; 31.01.2020 (வெள்ளிக்கிழமை) ஆகும். மேலதிக விபரங்களைப் பெறவிரும்புவோர் 021-222-3612 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.
பதிவாளர்
16.01.2020