Site news

பரீட்சைகளுக்கான விண்ணப்பம்

பரீட்சைகளுக்கான விண்ணப்பம்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

வெளிவாரிப் பரீட்சைகள் - 2017

வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறி (வெளிவாரி)
1. முதலாம் வருட 2ம் அரையாண்டுப் பரீட்சை
2. இரண்டாம் வருட 2ம் அரையாண்டுப் பரீட்சை
3. மூன்றாம் வருட 2ம் அரையாண்டுப் பரீட்சை

மேற்படி பரீட்சைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் யூலை மாத நடுப்பகுதியில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப் பரீட்சைக்கு தோற்றத் தகுதியான பரீட்சார்த்திகள் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்திலோ அல்லது  www.codl.jfn.ac.lk  எனும் இணையத்தள முகவரியிலோஅல்லது இத்துடன் உள்ள இணைப்புகளிலோ  விண்ணப்பப்படிவத்தினைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேற்படி பரீட்சைகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி; 05.07.2019 (வெள்ளிக்கிழமை) ஆகும். மேலதிக விபரங்களைப் பெறவிரும்புவோர் 021-222-3612 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம். மீள்பரீட்சார்த்திகள் உரிய  பரீட்சை கட்டணங்களை செலுத்தவேண்டும் . பரீட்சைக்கு விண்ணப்பிக்காதவர்கள் பரீட்சைக்கு தோற்றமுடியாது

 முன்னைய அணிகளில் இருந்து மீள் பரீட்சைக்கு தோற்றுபவர்களும் விண்ணப்பிக்கலாம்.மீள்பரீட்சார்த்திகள் பரீட்சைக்கட்டணம் (ஒரு பாடத்திற்கு 1500 ரூபா )செலுத்தவேண்டும். வழமையான பணம் கட்டும் படிவங்களை இதற்காக பயன்படுத்தலாம். ஏதேனும் காரணங்களுக்காக முன்னைய அணிகளில்  பரீட்சை எடுக்கத்தவறிய  மீள்பரீட்சார்திகள், தங்கள் பெறுபேற்றை உயர்த்த மீள தோற்றுபவர்களும்   கட்டணம் செலுத்தவேண்டும். 

முன்னர் பரீட்சை எடுக்கத்தவறியவர்கள் மீள எடுக்கும்போது மருத்துவச்சான்றிதழுடன் கூடிய  மேன்முறையீடு அவசியம் அதனை சமர்ப்பிக்காதவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்தாலும் மேன்முறையீட்டை பரீட்சைக்கு முன்பதாக செய்து அனுமதி பெற்றிருக்கவேண்டும் 

ஒவ்வொரு ஆண்டுக்கும் அதற்குரிய விண்ணப்பத்தை பயன்படுத்தவும். மாணவர் அடையாள அட்டையில் உள்ளவாறு பதிவிலக்கம் மற்றும் தகவல்கள் வழங்கப்படவேண்டும். பிழையாக வழங்கப்படின் நிராகரிக்கப்படும்.

 

பதிவாளர்
12.06.2019

இணைப்புக்கள்

பரீட்சை விண்ணப்பங்கள் அனுப்பப்படவேண்டிய தபால் முகவரி

பதிவாளர் , 
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம் (CODL), 
யாழ் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்

English:
======
Registrar
Center for Open and Distance Learning
University of Jaffna
Thirunelvely
Jaffna