08.04.2017 தொடக்கம் 07.05.2017 வரை நடைபெறவுள்ள 1ம் 2ம் 3ம் ஆண்டுகளுக்கான 2ம் அரையாண்டுப்பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அனுமதி அட்டைகள் 05.04.2017 புதன்கிழமை தொடக்கம் 07.04.2017 வெள்ளிக்கிழமை வரை திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம்
மாணவர்கள் அனுமதியட்டை பெறசெல்லும்வேளை உங்களின் இணையவழி விண்ணப்பத்தின் அச்சுப்பிரதியில் கையெழுத்திட்டு சமர்பிக்கவேண்டும். இல்லாத பட்சத்தில் வழங்கப்படமாட்டாது
மேலும் மீள்பரீட்சார்த்திகள் தங்கள் கட்டணங்களை செலுத்தியதற்கான பற்றுச்சீட்டினையும் சமர்ப்பிக்கவேண்டும்.
தவிர்க்கமுடியாத காரணத்தினால் நேரடியாக பெறமுடியாத வெளிமாவட்ட பரீட்சார்த்திகள் காலையில் பரீட்சை நேரத்திலும் 1 மணித்தியாலம் முன்பாக வருமாறும் வேண்டப்படுகின்றனர் ( விண்ணப்பத்தின் அச்சுப்பிரதி உள்ளிட்ட உரிய ஆவணங்கள் அவசியம்) . இறுதி நேரத்தில் வருகைதருவோருக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. பரீட்சைக்கு விணப்பிக்காத எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.
இணைப்பாளர்