Site news

பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

இணையவழி மூலமான வியாபார முகாமைத்துவமாணிப் பட்டப்படிப்பு பரீட்சை விண்ணப்பங்கள்

இணையவழி மூலமான வியாபார முகாமைத்துவமாணிப் பட்டப்படிப்பபின் 1ம் 2ம் 3ம் வருடங்களுக்கான 1ம் அரையாண்டுப்பரீட்சைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (வவுனியாவில் நடைபெறாது). இப்பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் பரீட்சார்த்திகள் பரீட்சைக்கான உரிய விண்ணப்படிவத்தினை இணைப்பில் இருந்து தரவிறக்கம் செய்து பூரணப்படுத்தி வெளிவாரிப்பிரிவுக்கு நேரடியாகவோ பதிவுத்தபால் மூலமாகவோ எதிர்வரும் செப்டெம்பர் 30ம் திகதிக்கு முன்பாக அனுப்பிவைக்குமாறு கேட்கப்படுகின்றனர். இம்முறை இணைய வழி விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது

சகலபாடங்களுக்கும் ஒரேவிண்ணப்பத்திலேயே விண்ணப்பிக்கவும். ஒவ்வொரு அண்டுக்கும் அதற்குரிய விண்ணப்பத்தை பயன்படுத்தவும். மாணவர் அடையாள அட்டையில் உள்ளவாறு பதிவிலக்கம் மற்றும் தகவல்கள் வழங்கப்படவேண்டும். பிழையாக வழங்கப்படின் நிராகரிக்கப்படும்.

பரீட்சைக்கு விண்ணப்பிக்காத எந்தவொருமாணவரும் பரீட்சைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். முன்னைய அணிகளில் இருந்து மீள் பரீட்சைக்கு தோற்றுபவர்களும் விண்ணப்பிக்கலாம்.மீள்பரீட்சார்த்திகள் பரீட்சைக்கட்டணம் (ஒரு பாடத்திற்கு 1500 ரூபா )செலுத்தவேண்டும். வழமையான பணம் கட்டும் படிவங்களை இதற்காக பயன்படுத்தலாம். உரிய அணியில் முதன்முறையாக தோற்றுபவர்களும்  மேன்முறையீடு செய்து முதற்தடவையாக தோற்றுபவர்களும் கட்டணம் செலுத்தவேண்டியதில்லை. ஏதேனும் காரணங்களுக்காக முன்னைய அணிகளில்  பரீட்சை எடுக்கத்தவறிய  மீள்பரீட்சார்திகள், தங்கள் பெறுபேற்றை உயர்த்த மீள தோற்றுபவர்களும்   கட்டணம் செலுத்தவேண்டும். 

முன்னர் பரீட்சை எடுக்கத்தவறியவர்கள் மீள எடுக்கும்போது மருத்துவச்சான்றிதழுடன் கூடிய  மேன்முறையீடு அவசியம் அதனை சமர்ப்பிக்காதவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்தாலும் மேன்முறையீட்டை பரீட்சைக்கு முன்பதாக செய்து அனுமதி பெற்றிருக்கவேண்டும் தவறியவர்கள் சனிஞாயிறு உட்பட சகல தினங்களிலும் வரும்  3ம் திகதிக்கு முன்பாக அலுவலகத்தில் உங்கள் மேன்முறையீட்டை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும்.


சந்தேகங்களுக்கு coordinatorbbm@gmail.com என்ற மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ளவும். 30.09.2017 ம் திகதிக்கு பின்னர் விண்ணப்பிக்க முடியாது.

மேலதிக தகவல்களுக்கு 0777563213 அல்லது 021 222 1106, 021 222 3612 உடன் தொடர்பு கொள்ளவும்

பரீட்சை விண்ணப்பங்கள் அனுப்பப்படவேண்டிய தபால் முகவரி

பதிவாளர் ,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம் (CODL),
யாழ் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்

English:
======
Registrar
Center for Open and Distance Learning
University of Jaffna
Thirunelvely
Jaffna

பரீட்சை விண்ணப்ப படிவங்கள்
1ம் வருடம்  இங்கே
2ம் வருடம்  இங்கே
3ம் வருடம் இங்கே

பணம் கட்டும் படிவம் இங்கே